பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மேத்யூ ஹைடன்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஏசன் மணியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைவராக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார்.
ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றதையடுத்து, டி20 உலக கோப்பை நெருங்குவதையெல்லாம் கூட பொருட்படுத்தாமல், டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒருசில மணி நேரத்தில் பயிற்சியாளர்கள் பதவியை ராஜினாமா செய்தனர் மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ்.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரும், ஜாம்பவான் கிரிக்கெட் வீரருமான மேத்யூ ஹைடன் நியமிக்கப்பட்டுள்ளார். பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் வெர்னான் ஃபிலாண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 1994லிருந்து 2009 வரை ஆடிய மேத்யூ ஹைடன், 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8625 ரன்களையும், 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6133 ரன்களையும், 9 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 308 ரன்களையும் குவித்துள்ளார்.

வெர்னான் ஃபிலாண்டர் தென்னாப்பிரிக்க அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 224 விக்கெட்டுகளையும் 30 ஒருநாள் போட்டிகளீல் ஆடி 41 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 7 டி20 போட்டிகளில் ஆடி 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் ஃபிலாண்டர்.

Leave A Reply

Your email address will not be published.