இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளதாக தகவல்!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்படும் அதிநவீன PCR பரிசோதனை ஆய்வகம் வரும் 20 ம் திகதி திறக்கப்படும் என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த ஆய்வகத்தை இன்று காலை ஆய்வு செய்த போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும் புதிய PCR ஆய்வகத்தின் மூலம் ஒரு நாளைக்கு 7,000 பரிசோதனைகளை செய்ய முடியும். மேலும் மூன்று மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்தும், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்ற சுற்றுலா பயணிகள் எந்த தடையும் இல்லாமல் நாட்டிற்குள் நுழைய முடியுமென்பதையும் உறுதிப்படுத்துவதாக சுற்றுலா அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.