இன்றையபஞ்சாங்கம் 15.09.2021 ராசிபலன்.

சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:07

சந்திர உதயாதி நாழிகை : 13:51
சந்திர அஸ்தமனம் : 25:27

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : ஆவணி 30

பட்சம் : சுக்ல பக்ஷம்

திதி : நவமி – 11:17 வரை

நட்சத்திரத்தன்று : பூராடம் – 28:56 வரை

யோகம் : சௌபாக்கியம் – 24:53 வரை

முதல் கர்ணன் : கௌலவம் – 11:17 வரை
இரண்டாவது கர்ணன் : சைதுளை – 22:25 வரை

சூரிய அடையாளம் : சிம்மம்
சந்திரன் அடையாளம் : தனுசு

அபிஜித் : இன்று இல்லை

துர்முஹுர்த்தம் : 11:40 – 12:28

அமிர்தகாலம் : 24:20 – 25:52

Varjyam : 15:08 – 16:40

ராகுகாலம் : 12:04 – 13:35

குளிகை : 10:33 – 12:04

யமகண்டம் : 07:32 – 09:03

சந்திராஷ்டமம்
ரோகிணி

💐மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

💐ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராற்றில் போய் முடியும். தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

💐மிதுனம்

மிதுனம்: சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மகிழ்ச்சியான நாள்.

💐கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்களது ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

💐சிம்மம்

சிம்மம்: பிள்ளைகளின் வருங்கால ஆசைகளில் ஒன்று நிறைவேறும். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

💐கன்னி

கன்னி: அரசு அதிகாரி உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றும் நாள்.

💐துலாம்

துலாம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

💐விருச்சிகம்

விருச்சிகம்: இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய மாற்றம் வரும் நாள்.

💐தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

💐மகரம்

மகரம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

💐கும்பம்

கும்பம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.

💐மீனம்

மீனம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தொட்டது துலங்கும் நாள்.

Leave A Reply

Your email address will not be published.