திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை.

திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மாவட்ட வைத்திய அதிகாரி P.மோகனகாந்தன் தலைமையில் சுகாதார குழுவினர் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக இயங்குகின்றனவா என சோதனைக்குட்படித்தினார்.

இதன் போது சில வர்த்தக நிலைகளில் இருந்து காலாவதியான பொருட்களும் பாவனைக்கு உதவாத பொருட்களும் கைப்பற்றியதுடன் அவ் வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் குழுவினரால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதுடன் அப்பொருட்களையும் கைப்பற்றி திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இவ் நடவடிக்கையானது எதிர்வரும் காலங்களில் தொடரும் என திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மாவட்ட வைத்திய அதிகாரி P.மோகனகாந்தன் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.