சிறைச்சாலை சம்பவத்திற்கு அமைச்சர் மட்டுமல்ல அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் – சேனக பெரேரா

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சேனக பெரோரா தெரிவித்தார்.

இன்று (15) கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சேனக பெரேரா இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக இருந்த காரணத்தால், சிறை போன்ற இடங்களில் குடிபோதையில் நடந்துகொள்ள அவருக்கு உரிமை இல்லை என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வெளியில் இருந்து வருவோர் மட்டுமல்ல , சிறை அதிகாரிகள் கூட துப்பாக்கிகளுடன் சிறைச்சாலைக்குள் நுழைய முடியாது என சுட்டிக் கட்டிய திரு. சேனக பெரேரா , இதற்கு அமைச்சர் மட்டுமின்றி சிறை அதிகாரிகளும் பொறுப்பு என்றும் அவர்களுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.