இன்றைய_ராசிபலன் 16.09.2021 இன்றையபஞ்சாங்கம்.

சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:06

சந்திர உதயாதி நாழிகை : 14:49
சந்திர அஸ்தமனம் : 26:28

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : ஆவணி 31

பட்சம் : சுக்ல பக்ஷம்

திதி : தசமி – 09:36 வரை

நட்சத்திரத்தன்று : உத்திராடம் – 28:09 வரை

யோகம் : சோபனம் – 22:32 வரை

முதல் கர்ணன் : கரசை – 09:36 வரை
இரண்டாவது கர்ணன் : வனசை – 20:50 வரை

சூரிய அடையாளம் : சிம்மம் – 25:29 வரை
சந்திரன் அடையாளம் : தனு – 10:43 வரை

அபிஜித் : 11:39 – 12:28

துர் முஹுர்த்தம் : 10:03 – 10:51
14:53 – 15:41

அமிர்தகாலம் : 21:57 – 23:30

Varjyam : 12:40 – 14:13

ராகுகாலம்: 13:34 – 15:05

குளிகை: 09:02 – 10:33

யமகண்டம் : 06:01 – 07:32

சந்திராஷ்டமம்
மிருகசீரிஷம்

சுபஹோரைகள்
காலை 06:00-07:00
09:00-10:00
10:00-11:00
11:00-12:00
மதியம்-01:00-02:00
மாலை-04:00-05:00
05:00-06:00-07:00
இரவு 08:00-09:00

💐மேஷம்

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

💐ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உறவினரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

💐மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். அவசரப் பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

💐கடகம்

கடகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபா ரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தி யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நாள் இல்லை.

💐சிம்மம்

சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடு வார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

💐கன்னி

கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

💐துலாம்

துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவு வார்கள். புது வேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்கு தாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

💐விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினரை கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

💐தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரை குறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

💐மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி களிடம் பிரச்னை வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

💐கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைவரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

💐மீனம்

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புதுப் பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

Leave A Reply

Your email address will not be published.