எண் கணித பலன்கள்(அனைத்து திகதிகளில் பிறந்தவர்களுக்கும்)

நம்பர்-1.
———–
வாழ்வில் எல்லாவற்றியிலும் அனைவரும் வர நினைப்பது நம்பர் 1 ஆகத்தான்.சரி 1-ம் நம்பரை பற்றி பார்ப்போமா?இந்த எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் சூரியன் ஆகும்.உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ காரணமாக இருப்பவர் இவரே.

1,10,19,28 இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் யோகத்தை தரக்குடியவராக இருப்பார்.இந்த தேதியில் பிறந்து,ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்து அந்த திசா மட்டும் வந்தால்,உயர்ந்த இடத்தில் வேலை,தலைமை பொறுப்பு,அரசாங்க பதவி,சமுதாயத்தில் மற்றவர் மதிக்கும் இடத்தில் நம்பர் 1-ஆக இருப்பார்.

சூரியனின் குணமே தலைமை பண்புதான்.இந்த தேதியில் பெண்ணாக பிறந்தாலும் அவரும் நிர்வகிக்கும் திறமையை பெற்றியிருப்பார்.நல்ல ஆளுமைதிறன்,பேச்சு திறன் இருக்கும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு..,
ராசியான நிறம்- சிகப்பு.
இஷ்ட தெய்வம்-சிவன்.
ராசி கல்-மாணிக்கம்.
கிழமை-ஞாயிறு.

மேற்கண்ட பலன்கள் பொதுவானதாகும்.ஜாதகத்தின் சூரியன் மற்றும் மற்ற கிரகங்களின் நிலையை வைத்தும் மேற்கண்ட தேதிகளில் பிறந்தவர்கள் வளமான வாழ்வை அமைத்துகொள்ளலாம்.

2-ம் எண்ணின் ரகசியங்கள்..,
————————————–
இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.இந்த எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் சந்திரன் ஆகும்.

2,11,20,29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள்.சந்திரனை ஜோதிடத்தில் நீர் கிரகம் என அழைப்பார்கள்.இந்த எண்ணின் பிறந்தவர்கள் எளிதில் கலங்கும் மனம் உடையவர்களாக இருந்தாலும்,பின் தெளிவாகி விடுவார்கள்.

இவர்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டு.எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும்.கடல் தாண்டி சென்று சம்பாதிக்கும் யோகம் உண்டு.

இஷ்ட தெய்வம்-பராசக்தி.
ராசியான நிறம்-வெள்ளை.

3-ம் எண்ணின் பலன்கள்;
———————————–
வாழ்வின் முக்கியமான வார்த்தைகளும்,விசயங்களும் மூன்றிலேயே அடங்கி விடுகிறது.நம்மை காக்கும் கடவுள் மூவர்.நம்மை இந்த உலகுக்கு தந்த அப்பா,அம்மா மூன்றேழுத்து இப்படி சொல்லிகொண்டே போகலாம்.
3-ம் எண்ணின் பலன்களை பார்ப்போமா.,

3,12,21,30 இந்த எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் குரு(பிரகஸ்பதி) ஆகும்.எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்யாவிட்டாலும் கவலைபடமாட்டார்கள்.

தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள்.தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைக்ககூடியவர்கள்.

அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும் அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, நேர்மை இருக்கும்.இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள்.விட்டுகொடுக்கும் தன்மை உண்டு.

குரு ஆதிக்கம் நன்கு அமையப் பெற்றவர்கள். அன்பிலும், பக்தியிலும், சிறந்தவர்கள். ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக் காட்டுவார்கள்.. பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள்.

இவர்களுக்கு ஆசிரியர், ஜோதிடர்கள்,எழுத்தாளர்கள், போன்ற அறிவைத் தூண்டும் தொழில்கள் சிறப்பு தரும். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும் யோகம் உண்டு. தர்ம ஸ்தாபனங்களில் உத்தியோகம் கிடைக்கும். பேச்சாளர்கள், சிறந்த நுண்ணிய சாத்திர ஆராய்ச்சியார்கள், ஆலோசனையாளர்கள் போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.

4-ம் எண்ணின் பலன்கள்;
———————————–
4-ம் எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் ராகு ஆகும்.இந்த கிரகத்தின் குணாதிசயத்தை யாரலும் துல்லியாமாக கணிக்கமுடியாது.அதேபோல் இந்த எண்ணிலும் பிறந்தவர்அலும் ஒரேவிதமான மனநிலையில் இருக்க மாட்டார்கள்.

4,13,22,31 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் துப்பறியும் துறையிலிருப்பவர்கள்,ஆராய்ச்சியாளர்கள்,புலனாய்வு துறை,ரிப்போர்ட்டர் போன்ற துறைகளில் ஆர்வமாக இருப்பார்கள்.எப்போதும் நான்கு பேருடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தனிமையை வெறுப்பார்கள். பணம் சம்பாதிக்கும்போது இருக்கும் பொறுமையை, பணம் செலவழிப்பதில் காட்டமாட்டார்கள்.

இளமைப் பருவத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு கொள்வார்கள்.எதிலும் எதிர்ப்பு உள்ள விவகாரங்களையே எடுத்து வாதாடுவார்கள். நண்பர்களுக்காகச் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் மற்றவர்களின் உண்மையான அன்பிற்காக ஏங்குவார்கள். சமுதாயத்தின் முன்னேற்றம், நாட்டு நடப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிப் பொது இடங்களில் காரசாரமாகப் பேசுவார்கள்.

தங்களது சொந்தப் புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படமாட்டார்கள். ஆனால் அனைத்தும் தெரிந்த மனிதர் இவர்தான் என்று உலகத்தார் பேச வேண்டும் என நினைப்பார்கள். இவர்களது வருமானம் உயர உயரச் செலவும் அதிகமாகிக் கொண்டே வரும். எனவே, செலவு செய்வதில் நிதானம் தேவை. இவர்கள் மக்களை நிர்வகிக்கும் வித்தையை அறிந்தவர்கள். இதனால் போலீஸ், மேலாளர் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.

5-ம் எண் பலன்கள்;
——————————
இந்த எண்ணுகுறிய கிரகம் புதனாகும்.இந்த உலகை காத்து ரட்சிக்கும் மகாவிஷ்ணுவே புதனுக்குறிய தெய்வமாகும்.இந்த எண்ணை அனைவரும் விரும்புவார்கள். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலு பெற்று இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரக்கூடியது.

5,14,23 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தி அதாவது அறிவு மிகவும் அற்புதமானது.எல்லா நம்பர்களுக்கும் இல்லாத ஒரு பவர் இந்த எண்ணுக்கு உண்டு.எண் கணிதத்தில் 5 மட்டும் யாருக்கும் தீமை புரியாது.ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள்,சிந்தனைகள் கொண்டவராக இருப்பார்கள்.

இவர்களது பேச்சில் கேலியும் (அடுத்தவர் புண்படுத்தாமல்) கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும் இந்த 5 எண்காரர்களுக்கு உண்டு.

இவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள்.பிறர் முறையாகக் கணக்குகள் எழுதி வைத்துக் கொள்ள நினைக்கும் விபரங்களையும்கூட இவர்கள் மனதிலேயே நிலையாக வைத்துக் கொள்ளவும். விரும்பிய போது அவைகளை சரியாக எடுத்துக்காட்டியும் சொல்லுவார்கள்.

எழுத்தாளர்,பத்திரிக்கையாளர்,அரசியல் துறை,ஆடிட்டர்,தூதுவர்கள்,வான ஆராய்ச்சி,மக்கள் தொடர்பு,செய்தித்ட் துறை போன்ற தொழில்கள் அமையும்.

குறிப்பு;இது பொதுப்பலனகள் ஆகும்.பலருக்கு பொருந்தலாம்,சிலருக்கு பொருந்தாமல் போகலாம்.

6-ம் எண் பலன்கள்;
————————–
6-ம் எண்ணின் ஆதி பத்தியம் பெற்றகிரகம் சுக்கிரன்.அதிர்ஷ்டத்தையும்,அன்பையும் அள்ளிக்கொடுக்கும் கிரகம் எதுவென்றால் அது சுக்கிரன்தான்.அதிக சிந்தனை திறனும்,கற்பனை திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

6,15,24 இந்த எண் கொண்டவர்கள் இயல்,இசை,நாடகத்தில் ஆர்வமாக இருப்பார்கள்.கற்பனை திறனும்,அறிவும் அதிகமாக இருக்கும்.கடவுள்,சாஸ்திரங்கள் மீது நம்பிக்கை இருந்தாலும் வெளியில் காட்டிகொள்ளமாட்டார்கள்.உடல் உழைப்பால் சாதிப்பதை விட அறிவால சாதிக்கக்கூடியவர்கள்.

தன் வாழ்வில் முன்னேற கடுமையாக போராடக்கூடியவர்கள்.அடுத்தவர்களுக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்கள் இருந்தாலும் உதவி பெற்றவர்கள் நன்றி மறக்கக்கூடாது என எதிர்பார்ப்பார்கள்.ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் எதிர்பாலினருடன் அதிக ஈர்ப்பாக இருப்பார்கள்.சிற்றின்பத்தில் அதிக நாட்ட,ம் இருக்கும்.எல்லா கலைகளிலும் நாட்டம் கொண்டவர்கள்.

இந்த 6-ம் எண் கொண்டவர்கள் குபேரனின் குழந்தைகளாக கருதப்படுகிறது.ஏதோ ஒரு வழியில் இவர்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.ஆனால் அதை சேமிக்கும் பழக்கம் இருக்காது.தன்னை அழகு படுத்தி கொள்வதில் முகுந்த நாட்டம் கொண்டவர்கள்.

ஓவியம்,சிற்பம்,கலை,பாடலாசிரியர்,இயக்குனர்,கட்டிடகலை,அழகு சாதன வடிவமைப்பு,சங்கீதம்,பின்னணி பாடகர் போன்ற துறைகளில் நாட்டம் இருக்கும்.

7-ம் எண் பலன்கள்;
—————————
இந்த என்ணின் ஆதிபத்தியம் பெற்றகிரகம் கேது ஆகும்.மற்ற எல்லா எண்களும் மனித சக்திக்கு கட்டுபட்டது.ஆனால் இந்த 7-ம் எண் மட்டும் தெய்வ சக்திக்கு மட்டுமே கட்டுபட்டதாகும்.

7,16,25 இந்த எண்ணுக்குறியவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடாக இருப்பார்கள்.7-ம் எண் கொண்டவர்கள் இளமை காலத்தில் மிகுந்த சிரமங்களையும்,போராட்டங்களையும் சந்திப்பார்கள்.

நடு வயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும் கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்த பணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத் திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதை ஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.

இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும். இவர்கள் உடையிலே எளிமையும், சுத்தமும் இருக்கும்.பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது.வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரும்.இருந்தாலும் இந்த எண் காரர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன் வாழ்க்கையில் போராடி வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள்.

சினிமா
நட்சத்திரங்கள்,பாடகர்கள்,கவிஞர்கள்,கலைஞர்கள்,புகழ் பெற்ற எழுத்தாளர்கள்,ஆன்மிகவாதிகள்,ஜவுளி,பெட்ரோல்,டீசல்,குளிர்பான துறைகள் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.திரவ சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குப் பெருத்த இலாபங்களைக் கொடுக்கும்.

இயேசு கிறிஸ்து,ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த 7ம் எண்ணில் பிறந்தவர்களே!

8-ம் நம்பர் அபசகுனமா?
———————————
ஒவ்வொரு எண்ணும்,ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்தியத்தில் இருக்கும்.8-ம் எண்ணுக்குறிய கிரகம் சனி.பொதுவாகவே சனியின் மீது யாருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது.மற்றவரை திட்டுவதற்கு இவரை இழுக்காமல் இருக்கமாட்டார்கள்.அதனால்தான் 8-ம் எண் மேல் பெரும்பாலனவர்களுக்கு வெறுப்பு.

சனி உருவமும்,செயலும் சரியாக இல்லாவிட்டாலும் அவரை போல் ராஜ யோகத்தை கொடுப்பவர் யாரும் இல்லை.சனி எல்லாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார்.ஒருவரின் லக்கினத்திற்கு சனி யோககாரராக இருந்து அவர் இருக்கும் இடமும் வலுவாக இருந்து அந்த திசா மட்டும் வந்தால் போதும் குப்பையில் கிடந்தவரும் கோபுரத்தில் ஏறிவிடுவார்.இது நான் அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.

8,17,26 போன்ற எட்டாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சனி யோகராகவே இருப்பார்.இவர்கள் பெரும்பாலும் மன உறுதி படைத்தவர்களகவே இருப்பார்கள்.மேலும் எந்தவித காரியங்களையும் பொறுமையுடன் செய்வார்கள்.அறிவியல் மேதைகள்,விஞ்ஞானிகள்,ஆராய்ச்சியாளர்கள்,பிரபல இயக்குனர்கள் போன்றவர்கள் 8-ம் எண் ஆதிக்கத்திலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள்.

மகர ராசி,மகர லக்கினம்,கும்ப ராசி,கும்ப லக்கினம்,ரிசப லக்கினம்,துலாம் லக்கின காரர்களும்,பூசம்,அனுசம்,உத்திராட்டாதி நட்சத்திர காரர்களும் சனி வலுவாக இருந்தால் 8-ம் எண்ணை ராசியாக வைத்துகொண்டால் வாழ்வு வளம் பெரும்.எதிர்பாராத உயர்வு இருக்கும்.

9-ம் எண் பலன்கள்;
—————————–
தைரியத்திற்கும்,தன்னம்பிக்கைக்கும் உரிய எண் 9 ஆகும்.இந்த எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் செவ்வாய்.இதன் அதிபதி சேனாதிபதிகளுக்கு தலைவன்,தமிழ் கடவுள் முருகப் பெருமான் ஆவார்.

9,18,27 இந்த எண் காரர்களுக்கு திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் உண்டு. மனசாட்சியை விட எதை பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள் இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள்.

இவர்கள் எப்போதும் அலைபாயும் மனத்தை உடையவர்களாக இருப்பார்கள்.எந்த வேலையையும் உடனுக்குடன் செய்து விடுவார்கள்.அவசரமும்,சுறுசுறுப்பும் இருக்கும்.முன் கோபக்காரர்கள்.வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிப்பவர்கள்.

சிறு வயதுகளில் மிகவும் சிரமப்பட்டாலும், தங்ளது மன உறுதியினாலும், விடா முயற்சியினாலும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறி விடுவார்கள்.எதிலாவது பொறுப்பு கிடைத்தால் அவற்றில் மிகவும் தீவிரமாகவும், சிறப்பாகவும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்து முடிப்பார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் எஞ்சினியர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பார்கள். இராணுவம், போலீஸ், மேனேஜர் போன்ற அதிகாரப் பதவிகளின் விருப்பம் உடையவர்கள். மேலும் கட்டிடம் கட்டுதல் இயந்திரங்கள், வியாபாரம், இரும்புச் சாமான்கள் உற்பத்தி ஆகியவை நல்ல அதிர்ஷ்டம் தரும். சிறந்த அமைச்சர்களாகவும், இராஜ தந்திரிகளாகவும் இருப்பார்கள். வான இயல் துறையும், இவர்களுக்கு மிகவும் பிடிக்கும் .மேலும் எழுத்து துறை,கவிதை எழுதக்கூடியவர்கள்.விவசாய துறையிலும் ஜொலிப்பார்கள்.

போராட்ட குணத்துக்கு உரிய எண் என்பதால்தான் விளையாட்டு வீரர்கள் பெரும்பாலனவர்கள் 9-ம் நம்பர் வருவதுப்போல் தேர்ந்தெடுத்துகொள்வார்கள்.

கிழமை-செவ்வாய்.
கல்-பவழம்.
தெய்வம்-முருகன்.

Leave A Reply

Your email address will not be published.