ரத்வத்த குடும்பத்தின் வீணாய்ப் போன வாரிசு ! ; உபுல் ஜோசப் பெர்னாண்டோ

என் மூன்று கால் மாமாவிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி நான் என் அம்மா மற்றும் சகோதரியிடம்  சொன்னேன்.

ஒரு நாள் எனது மூன்று கால் மாமா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அரசாங்கத்தையும் அழிப்பார் என அனுர பண்டாரநாயக்க சொல்லியிருந்தார்.

அனுருத்த ரத்வத்த

அனுர பண்டாரநாயக்கதான்,   பண்டாரநாயக்க குடும்பத்தின் முடிக்குரியவராக இருந்தார். ஐதேக மேடையில் இருந்து கொண்டுதான்  ரத்வத்தேயை இப்படிச் அனுர பண்டாரநாயக்க சொன்னார். அவர் கர்னல் அனுருத்த ரத்வத்தேவை மூன்று கால்களின் மாமா என அழைத்தார். அந்த நேரத்தில் கர்னல் அனுருத்த ரத்வத்தே சந்திரிகாவின் அரசாங்கத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருந்தார்.

1993 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த கர்னல் அனுருத்த ரத்வத்தவினால் அனுராவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமைக்கு தடை விதிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் செயல்பட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் திருமதி பண்டாரநாயக்க, மகன் அனுராவின் கட்சி உறுப்பினர் நிலையை தடை செய்யும் கடிதத்தில் தொடர்ந்து கையெழுத்திட மறுத்த போதிலும், இறுதியில் அவரது உறவு சகோதரர் அனுருத்த ரத்வத்தேயின் வற்புறுத்தலின் பேரில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார்.

அனுரவும் (தம்பி) , சந்திரிகாவும் (அக்கா)

ஶ்ரீமாவோ தனது உறவினர் அனுருத்த ரத்வத்தேவை நம்பியிருந்தார், ஏனெனில் அவரது மகன் அனுர மற்றும் மகள் சந்திரிகா இருவரும் கட்சியை விட்டு அப்போது பிரிந்து போயிருந்தனர்.

அனுர ஐதேகவில் இணைந்த காலம்

அனுரவுக்கு ரத்வத்தே மீது அதிக கோபம் இருந்தது. அனுரவை , ஶ்ரீலங்கா சுதந்திரக்  கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தடை செய்த பின்னர் , அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றார். அதன்பின் சந்திரிகா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு  மீண்டும் திரும்பி வந்து ஆட்சியை பெற்றுக் கொண்டார்.

பண்டாரநாயக்க குடும்பம்

ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்த  அனுர எதிர்க்கட்சியான எதிரணிக்கு சென்று தனது மாமா அனுருத்த ரத்வத்தேவை தாக்கினார். அனுர , பண்டாரநாயக்கவின் மகனே அல்ல என  ரத்வத்தே திரும்பி அனுராவை தாக்கிப் பேசினார்.

ரத்வத்தேயின் பேச்சு அப்போதைய பிரதமர் சிறிமாவோவை புண்படுத்தியது. அப்போதுதான் அனுர , ரத்வத்தேவை ,  மூன்று கால் மாமா என பரிகசித்து அழைக்கத் தொடங்கினார். அனுருத்த ரத்வத்தே ,  பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்தபோது கார் விபத்து ஒன்றில்  சிக்கி கால் முறிந்தது. அதிலிருந்து அவர் ஒரு ஊன்றுகோலின் உதவியுடன்தான் நடந்து திரிந்தார்.

அனுருத்த ரத்வத்த எந்த வகையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் அல்ல. அவர்கள் தீவிர ஐ.தே.க ஆதரவாளர்கள். அவரது தந்தை ஹாரிஸ் ரத்வத்த 1947 இல் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு வந்தார். 1951 இல் பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கியபோது, ​​அவரது மனைவி திருமதி பண்டாரநாயக்கவின் உறவினரான ஹாரிஸ் ரத்வத்தேயிடம்  ஐ.தே.கவை விட்டு விலகி அவருடன் சேருமாறு கேட்டார், ஆனால் ஹாரிஸ் ரத்வத்தே நகைத்தார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறவில்லை.

அவரின் மகன் அனுருத்த ரத்வத்தவும் 1966 ஆம் ஆண்டு கண்டி மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிட்டார்.

பண்டாரநாயக்கவின் படுகொலைக்குப் பிறகு, அவர் தனது உறவினர் திருமதி பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க 1970 இல் பிரதமரானபோது, ​​அவளுடைய பாதுகாப்புக்கு அவர் பொறுப்பாக இருந்தார்.

1977 தோல்விக்குப் பிறகு, அனுராவும் சந்திரிகாவும் கட்சியிலிருந்து பிரிந்தபோது, ​​அனுருத்த ரத்வத்தே ஶ்ரீமாவோக்கு ஆதரவாக இருந்தார். அதனால்தான் ஶ்ரீமாவோ ,  அவரை கட்சியின் தேசிய அமைப்பாளராக்கினார்.

ஶ்ரீமாவோ – சந்திரிகா

ஆனால் 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக சந்திரிகா இருக்க வேண்டுமா இல்லையா என்ற கேள்வி எழுந்தபோது, ​​அனுருத்த ரத்வத்தே சந்திரிகாவைத்தான் ஆதரித்தார். அவர் ஶ்ரீமாவோ மீது அழுத்தம் கொடுத்து அனுராவை குடும்பத்தை விட்டு வெளியேற்றினார். 1994 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போது, சந்திரிகாவின் இரண்டாவது நிலைக்கு,  அனுருத்த ரத்வத்தே வந்தார். அவர் அவரை பாதுகாப்பு துணை அமைச்சராக நியமித்தார்.

அனுருத்த ரத்வத்தே

அனுருத்த ரத்வத்தே பாதுகாப்பு பிரதி அமைச்சராகி பண்டாரநாக்க குடும்பத்தின் இளவரர் போல ஆனார். யாழ்ப்பாணத்தை விடுவிக்கும் நடவடிக்கையின் நாயகனாக அவர் அபிஷேகம் செய்யப்பட்டார்.

லொகான் ரத்வத்தே

1997 ஆம் ஆண்டில், அவர் ஒரு போர் வீரராக பிரபலமடைந்தபோது, ​​கொள்ளுப்பிட்டியிலுள்ள கார்ல்டன் கிளப்பான பப்புவா நியூ கினியாவில் மிகவும் பிரபலமான ரக்பி வீரர்களில் ஒருவரான ஜோயல் பெரேராவின் படுகொலை இடம் பெற்றது. அந்த கொலைக்கு உடந்தை என ,  அவரது மகன் லொகான் ரத்வத்த வெளியுலகுக்கு  தெரிய வந்தார். லொகான் ரத்வத்த மற்றும் அவரது பாதுகாவலர்கள் ஜோயல் பெரேராவின் கொலை நடந்த இடத்தில் இருந்தனர், மேலும் லொகான் , ஜோயலைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

ஜோயலின் படுகொலையில் லொகான் சம்பந்தப்பட்டதாகவும், அதை மறைப்பதற்காக அவரது தந்தை அனுருத்த ரத்வத்த ,  துணை பாதுகாப்பு அமைச்சரான பதவியை பயன்படுத்தியதாகவும் அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியது. அனுருத்த ரத்வத்தே தனது மகன் கொலைக்கு காரணமானால், அவர் விசாரணையில் தலையிடப் போவதில்லை என்று கூறினார். லொகான் ரத்வத்தே எப்படியாவது ஜோயல் பெரேராவைக் கொன்ற குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் என்றாலும், கொலையாளியாக வேறொருவரை ஒப்புக் கொள்ள வைத்து ,  அரசாங்கம் லொகானைக் காப்பாற்றியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

அதற்கு பின், அனுருத்த ரத்வத்த, தன்னை ஒரு போர் வீரன் என காட்டிய பிம்பம் சிதைந்து போனது. கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அவர் மேற்கொண்ட ‘ஜெய சிகுறு’ நடவடிக்கை தோல்வியடைந்தது. விடுதலைப் புலிகள் இராணுவ முகாம்களைத் தாக்கத் தொடங்கினர். போரில் சந்திரிகாவுக்கும் அனுருத்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனுருத்த தனது விருப்பப்படி பாதுகாப்பு அமைச்சகத்தை இயக்கினார். இதன் விளைவாக விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை முற்றுகையிட்டு யாழ்ப்பாணத்தின் வீட்டு வாசலில் வந்து இலங்கை பொருளாதாரத்தை நாலாபுறமும் தாக்கினர்.

எம்.எச்.எம்.அஷ்ரப் & சந்திரிகா

2000 பொதுத் தேர்தலில், சந்திரிகா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் மக்கள் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார். அனுருத்த ரத்வத்தே மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இருவரும் கண்டி நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். இருவருக்கும் இடையே மோதல்கள் இருந்தன.

2001 இல் ஹக்கீமை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் சந்திரிகாவின் முடிவிலும் அனுருத்த ரத்வத்தவின்  பெரும் அழுத்தம்  இருந்தது. அதனால் சந்திரிகாவின் அரசாங்கம் வீழ்ந்தது. போரின் அழிவுகளால், சந்திரிகாவின் அரசாங்கம் 2001 பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.

அனுருத்த ரத்வத்த 2001 பொதுத் தேர்தலின் போது கண்டியில் வெற்றிபெற கடும்  பிரயத்தினத்தில் ஈடுபடத் தொடங்கினார். அவரும் அவரது மகன் லொகான் ரத்வத்தேயும் அந்த கடும் போட்டியில் தலைவர்களாக செயலாற்றினர்.

உடதலவின்ன பகுதி முஸ்லிம் காங்கிரஸின் வலுவான ஆதரவாளர்கள் 10 பேர் உடதலவின்னவில் வைத்துக் கொல்லப்பட்டனர். அனுருத்த மற்றும் அவரது இரண்டு மகன்களான லொகான் ரத்வத்தே மற்றும் சானுக ரத்வத்தே ஆகியோர் கொலைக் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டனர். உடதலவின்னாவில் பத்து பேரை கொல்ல சதி செய்ததாக லொகானும் சானுகவும் அனுருத்தவுடன் கைது செய்யப்பட்டனர். இந்த படுகொலை மற்றும் கண்டியில் நடந்த தேர்தல் குளறுபடிகள் காரணமாக அந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. அனுருத்த ரத்வத்தேயின் அரசியல் அத்தோடு முடிவுக்கு வந்தது.

அணுர பண்டாரநாயக்க – மகிந்த ராஜபக்ச

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்சவின் எழுச்சியுடன் அனுருத்த ரத்வத்தேயின் அரசியல் முற்றாக முடிவுற்றது. அனுருத்த ரத்வத்தே,  சந்திரிகாவின் அரசாங்கத்தில் பிரதமராகி, ஒருநாள் ஜனாதிபதியாவதான கனவுடன் இருந்தார். மகிந்த ராஜபக்ச,  கனவு காணும் அனுருத்த ரத்வத்தையின் மோசமான அரசியல் எதிரியாக இருந்தார். மஹிந்த ,  அனுராவின் சீடராக இருந்ததால், அனுருத்தவை ,  மகிந்த  கணக்கே எடுக்கவில்லை. ஐ.தே.கவில் இருக்கும் அனுர பண்டாரநாயக்க மூலம்  மகிந்த , மறைமுக தாக்குதல்களை தொடுத்தார் . கடைசியில் அனுருத்த ரத்வத்தேயின் அரசியல் முடிவுக்கு வந்தது, இறுதியில் மகிந்த ,  அனுருத்த ரத்வத்தையின் இடத்துக்கு வந்து  சந்திரிகாவின் அரசாங்கத்தின் பிரதமரானார்.

மஹிந்த 2005ல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அனுருத்த ரத்வத்த உடல்நிலை சரியில்லாமல் இருந்தமையால், லொகானும் சானுகாவும் மகிந்தவை ஆதரித்தனர், ஏனெனில் லொகானும்,  ராஜபக்சவின் மகன்மாரும்  ரக்பி விளையாட்டு  மூலம் நண்பர்களாகி இருந்தனர்.

தந்தையர்களின் கோபத்தை மறந்து, ராஜபக்ஷ மற்றும் ரத்வத்த குடும்பத்தினர் ரக்பி விளையாட்டு நட்பால் மீண்டும் நட்பாகினர்.

2006 ஆம் ஆண்டில், உயர் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, அனுருத்த ரத்வத்த மற்றும் அவரது மகன்களான லொகானையும் ,  சானுகவையும்  உடதலவின்ன கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தார்.அனுருத்த ரத்வத்தவின் மெய்க்காப்பாளர்கள் இந்த கொலைச் செயலுக்கு குற்றவாளிகள் என தண்டனை பெற்றனர்.

அனுருத்த ரத்வத்த நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு, லொகான் ரத்வத்த,  மகிந்தவின் அழைப்பின் பேரில் அரசியலில் நுழைந்தார். 2010 பொதுத் தேர்தலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும் லொகான், மகிந்த மற்றும் ராஜபக்ச குடும்பத்தைக் காக்கும் நெருங்கிய மெய்க்காப்பாளர் போல மாறினார்.

2015 இல் மஹிந்த தோல்வியடைந்த பின்னரும், லொகான் மகிந்த மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலராகவே இருந்தார்.

லொகானின் மகளுக்கும் மஹிந்தவின் மகனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் ஊடக செய்திகள் தெரிவித்தன. ஆனால் அது நடக்கவில்லை. அதன் பிறகு, லொகானுக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கும் இடையே நெருங்கிய உறவு முறிந்தது. அந்த திருமணம் மட்டும் நடந்திருந்தால், அது ராஜபக்சவுக்கும் ரத்வத்தேவுக்கும் இடையிலான வரலாற்று திருமணமாக இருந்திருக்கும். மகிந்தவின் மகன் யோசித்த வேறொரு பெண்ணை மணமுடித்தார்.

கோட்டாபய – லொகான் ரத்வத்தே

கோத்தபாய ஜனாதிபதியானதும் ,  லொஹான் ரத்வத்தே சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுவதோடு  லொகான் மீண்டும் அரசியல் பலம் வாய்ந்தவராக மாறினார். அவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பின், ஜோயெல் பெரேராவின் படுகொலை மற்றும் உடதலவின்னாவில் வைத்து பத்து பேர் கொல்லப்பட்டவை  ஆகியவற்றை மக்கள் மறந்துவிட்டனர்.

ருவன்மஹாவேலி ஸ்தூபி

நள்ளிரவொன்றில்  ருவன்மஹாவேலி ஸ்தூபி உள்ள புனித பகுதிக்குள்  குடித்துவிட்டு சென்று பேயாட்டம் ஆடியதை ஊடகங்கள் வெளிப்படுத்திய போது  லொகானின் நடத்தைகள் பகிரங்கப்படுத்துப்பட்டது.

அவரது சமீபத்திய பேயாட்டம் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை துப்பாக்கியால் அச்சுறுத்தியதாகும். ஐநா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் இந்த நாடகத்தை அரங்கேற்றினார்.

மஹிந்த , லொகானை பதவி விலகச் சொன்னார், கோத்தபாய ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு பயந்து அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். ஏனெனில் லொகான் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தினார். ஆனால் லொகான் இன்னும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் உள்ளார்.

‘லொகானின்  தந்தை அனுருத்த ரத்வத்த,  பண்டாரநாயக்கவினரை இல்லாது செய்ததைப் போல,  மகன் லொகான் ரத்வத்த ராஜபக்ஷக்களை முடிப்பாரா?’

மூன்று கால் மாமாவின் மகன்,  நான்கு கால்களில் உள்ளவை செய்யும் (மிருகம்) வேலையை செய்யப் போய் , அரசு நான்கு கால்களும் உடைந்தது போல விழுந்துவிட்டதாக அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது லொகானின் தவறு அல்ல.  ஜோயெல் பெரேராவை படுகொலை செய்ததாகவும், உடதலவின்னாவில் பத்து பேரை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடம் விஞ்ஞான ரீதியாக  அமைச்சை பகிர்ந்தளிப்பதாக  ராஜபக்சதான் கைதிகளை லொகானிடம் ஒப்படைத்தார்,  .

பண்டாரநாயக்க மற்றும் ரத்வத்தே ஆகியோர் 1931 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் இருந்து அரசியலைத் தொடங்கிய ஒரு தலைமுறை. பண்டாரநாயக்கவின் அரசியல் 2005 இல் முடிவடைந்தது. ரத்வத்தேகளின் அரசியலின் கல்லறைகள் இப்போது தெரிகின்றன. ராஜபக்ஷக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
ගුරුදා විග්‍රහය
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.