சுவிற்சர்லாந்துக்குள் நுழைவோருக்கான புதிய கட்டுப்பாடுகள்

இன்று (20.9.2021) முதல், சுவிற்சர்லாந்துகுள் நுழைவோருக்கான,கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

சுவிற்சர்லாந்துக்கு வருகை தருவோரிடம், கொவிட் பாஸ் இல்லாத பட்சத்தில், PCR பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுவதுடன், 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் PCR பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். பின்னர் பரிசோதனையின் முடிவுகளை சம்பந்தப்பட்ட மாகாண அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

PCR பரிசோதனையை செய்துகொள்ளாதவர்களுக்கு 200 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படும்.

சுவிற்சர்லாந்துக்கு வரும் அனைத்து பயணிகளும், சுவிட்சர்லாந்துக்கு வரும் முன், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க உதவும் ஆவணம் ஒன்றை நிரப்பவேண்டும்.

இக் கட்டுப்பாடுகள் எல்லைப் பகுதியிலிருந்து வாழ்பவர்களுக்கு பொருந்தாது என்றும், அதனால் எல்லை தாண்டி பணிக்கு வரும் பணியாளர்களும், ஷாப்பிங் வருபவர்களும் கூடுதல் ஆவணங்களை நிரப்பவேண்டியதில்லை என்றும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.