மீன்களை ஏற்றிச் சென்ற வாகனம் பாரிய விபத்தில் சிக்கியது.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்பாக இன்று அதிகாலை விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் நேரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.