மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் அட்லீ.

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர், இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் தான்.

அட்லீ அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் Lion என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மும்பை நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இயக்குனர் அட்லீக்கு பிறந்தநாள் என்பதால் தமிழ் சினிமாவை சேர்ந்த அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

மேலும் தற்போது பிரியா அட்லீ நேற்று அட்லீ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் ஆர்யா மற்றும் சயீஷா கலந்து கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.