பொசொன் பௌர்ணமி தினமான இன்றைய தினத்தில் ஸ்ரோபெரி சந்திரகிரகணம்

அமெரிக்காவில் ஜூன் மாதம் ஸ்ரோபெரி அறுவடைக்காலம் எனப்படுவதுடன் இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணம் ஸ்ரோபெரி சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகின்றது.

இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படும் முழு நிலவை வேறொருவர் வாயால் கடித்ததனை போன்றதொரு நிழல் அதனில் மறைந்திருக்கும்.

அதனாலேயே இந்த மாதத்தில் நிகழவுள்ள பெனும்பிரல் சந்திர கிரகணத்திற்கு ஸ்ரோபெரி சந்திரகிரகணம் என பெயரிட்டுள்ளனர்.

ஆசியா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இன்றைய தினம் இந்த ஸ்ரோபெரி சந்திரகிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு 12.15 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இலங்கையில் இந்த ஸ்ரோபெரி சந்திரகிரகணத்தை மக்கள் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.