யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து விபத்து.

குடும்பத்துடன் சென்ற பேருந்து
விபத்து!
யாழில் சம்பவம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பேருந்தில் செல்லும் பொழுது பேருந்தானது
அரச மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் 6 பேர் பயணித்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றைய இருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த மூவரும்1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.