சூனியம் மந்திரம் கூறி ₹80 லட்சம் ஏமாற்றி சொகுசு பங்களா கட்டிய குடும்பத்தினர்!

சென்னை தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது-41)இவரது கணவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மற்றும் அதே பகுதியை சேர்ந்த கற்பகமும் (வயது-35) கணவனை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். அதுமட்டுமின்றி
கற்பகத்தின் தங்கை அனிதாவுக்கும் (வயது-29) அவரது கணவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை வருவதால் வாழ்க்கையில் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த பாத்திமா (வயது-40)மற்றும் பாத்திமாவின் தம்பி அபு ஹசன் (வயது-35) இவர் தங்கை ரஹமது பீவி நிஷா (வயது-29), அபு ஹசனின் நண்பர் ராஜேந்திரன் (வயது-41) ஆகிய நான்கு பேரும் கன்னடபாளையம் பகுதியைஅந்தோணியம்மாள்,கற்பகம் மற்றும் அனிதா இவர்கள் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருவதை தெரிந்ததும்

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

உடனே அவர்கள் வீட்டுக்குச் சென்று உங்களுக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாகக் கூறி அதனால்தான் கணவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும்,தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றது கூறியுள்ளனர்.

மேலும் சூனியத்தை மந்திரம் செய்து எடுத்துவிட்டால் மீண்டும் கணவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் உங்கள் குடும்ப பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என ஆசை வார்த்தைகள் கூறி எலுமிச்சைப் பழம், பூசணிக்காய், பொம்மைகள் என வைத்து பூஜை செய்வது போல் செய்து கடந்த ஒரு ஆண்டாக அந்தோனி அம்மாளிடம் 30 லட்சம் ரூபாய் மற்றும் கற்பகத்திடம் 30 லட்சம், அனிதாவிடம் 20 லட்சம் என வாங்கியுள்ளனர்.

அந்தோணியம்மாள்,கற்பகம் அனிதா இவர்களது கணவர்கள் தற்போது வரை வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த இது குறித்து விசாரித்த பாத்திமா மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் போட்டு ஏமாற்றி பணம் பறித்தது குறித்து தெரியவந்தது

அதுமட்டுமின்றி ஏமாற்றி வாங்கி பணத்தில் இரும்புலியூர்,சந்திரன் நகர், பாத்திமா தெருவில் இடம் வாங்கி சொகுசு பங்களா ஒன்று கட்டி அதில் தற்போது பாத்திமா குடும்பத்துடன் வசித்து வருவது தெரியவந்தது.

அந்தோணியம்மாள்,கற்பகம் மற்றும் அனிதா இந்த சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல பாத்திமா மற்றும் அவரது கூட்டாளிகள் 10க்கும் மேற்பட்டோரிடம் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஏமாற்றியதாகவும், ஏமாற்றப்பட்ட பணத்தில் கட்டப்பட்ட சொகுசு பங்களாவை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை போலீசார் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.