பருத்தித்துறை வைத்தியசாலையில் சிறுவர் தின நிகழ்வு!

சர்வதேச சிறுவர் தின நிகழ்வு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிறுவர் விடுதியில் நடைபெற்றது.

வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் இன்று மங்கள விளக்கு ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

மங்கள விளக்குகளை சிறுவர் வைத்திய நிபுணர் திருமதி சண்முகப்பிரியா, பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன், சத்திர சிகிச்சை நிபுணர் பிரகதீஸ்வரன், பொது வைத்திய நிபுணர் பி.நிறஞ்சினி, மகப்பேற்று வைத்திய நிபுணர் எஸ்.சுயேத்திரா, தோல் வைத்திய நிபுணர் கே.அனுசன் உட்படப் பலரும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.