பருத்தித்துறையில் பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுகின்ற மற்றும் விசேட தேவையுள்ள 12 -19 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குக் கொரோனாத் தடுப்பூசியான பைசர் ஏற்றுகின்ற அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

வைத்தியசாலையின் மாநாட்டு மண்டபத்தில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி பரணிதரன் கலந்து சிறப்பித்ததோடு தடுப்பூசி ஏற்றும் வைபவத்தையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நாளை சனிக்கிழமையில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் ஏற்கனவே விபரங்கள் திரட்டப்பட்டு பதிவு செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட சிறார்களுக்குத் தினமும் இந்தத் தடுப்பூசி வைத்தியசாலையில் போடப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.