ஐ.பி.எல்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் ‘திரில்’ வெற்றி.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் ‘திரில்’ வெற்றிபெற்றது.,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் களமிறங்கினர். கில் 7 பந்துகளில் 7ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவி பிஸ்மானி பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த திரிபாதி தொடக்க வீரர் வெங்கடேஷ் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

திரிபாதி 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால், அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் அரைசதம் கடந்தார். அவர் 49 பந்துகளில் 67 ரன்கள் குவித்த நிலையில் ரவி பிஸ்மானி பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த நிதிஷ் ராணா 18 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மயங்க் அகரால் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 40 ரன்கள் குவித்து சக்ரவர்த்தி பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த நிகோலஸ் புரன் 12 ரன்னிலும், மார்க்ரம் 18 ரன்னிலும் வெளியேறினர்.

ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம் விளாசினார். 55 பந்துகளில் 67 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் கடைசி ஓவரில் வெங்கடேஷ் பந்துவீச்சில் வெளியேறினார்.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் ’திரில்’ வெற்றிபெற்றது.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணியின் ஷாரூக் கான் 9 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 22 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். கொல்கத்தா தரப்பில் அந்த அணியின் வருண் சக்ரவர்த்தி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.