கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற நோயாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு நோய்த்தாக்கங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, நிர்ப்பீடனம், உயிரணு கற்கை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர (Dr. J.M CHANDIMA JEEWANDARA) இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அசாதாரணமான முறையில் சுவாசித்தல், வயிற்றுடன் தொடர்புடைய நோய் அறிகுறிகள், உளவியல் தாக்கம், நெஞ்சு மற்றும் தொண்டை வலி, சோர்வு, தலைவலி, தசை வலி நோய்த்தாக்கங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

கொவிட் தொற்றுக்குள்ளாகியவர்களில் 15 வீதமான பெண்கள் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாவதாக சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

1.5 வீதமானவர்களுக்கு தசை வலி தொடர்வதாகவும் 7 வீதமானவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகிய 90 முதல் 180 நாட்களுக்குள் 9 நோய் தாக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.