பல கோடி சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை ஏறுவதை விட தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம்தான் அதிகமாகிக் கொண்டு செல்கிறது. ஏதாவது ஒரு படம் வெளியாகி விட்டால் உடனே சம்பளம் ஏற்றுவது, இல்லையென்றால் ஏதாவது ஒரு படத்திற்கு வரவேற்பு அதிகமாகிவிட்டால் உடனே தயாரிப்பாளரிடம் பணத்தைக் அதிகப்படியாக சம்பளம் கேட்பது என தொடர்ந்து பல நடிகர்களும் சேட்டைகளை செய்து வருகின்றனர்.

பல கோடி சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.. விழி பிதுங்கிய தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழுவினர் பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் தற்போது படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஒரு பக்கம் தயாரிப்பாளர்கள் சந்தோசமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சிவகார்த்தியன் செய்வது சரியல்ல என பல தயாரிப்பாளர்களும் கூறிவருகின்றனர்.

அதாவது டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பார்த்துவிட்டு தற்போது நடித்து வரும் டான் படத்திற்கு லைக்கா நிறுவனத்திடம் 35 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.