2024 ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது யார்? : உபுல் ஜோசப் பெர்னாண்டோ

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி 1982 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான எதிர்க்கட்சியில் இருந்து ஹெக்டர் கொப்பேகடுவவும் போட்டியிட்டனர்.

1988ல் நடந்த  இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில், ஐ.தே.க சார்பாக பிரேமதாச அரசாங்க தரப்பிலிருந்து போட்டியிட  முன் வந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து திருமதி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க முன் வந்தார்.

1994 இல், மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக சந்திரிகா அரசாங்க தரப்பிற்காக போட்டியிட்டார்.   எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மாறிய காமினி திஸாநாயக்க போட்டியிட வந்தார்.

1999 இல்  நடந்த நான்காவது ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்திற்காக சந்திரிகா போட்டியிட்டார். எதிர்க்கட்சியில் இருந்து ரணில் போட்டியிட முன் வந்தார்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தரப்பில் இருந்து மகிந்த போட்டியிட்டார். எதிர்க்கட்சியில் இருந்து ரணில்  போட்டியிட  முன் வந்தார்.

2010 இல் நடந்த ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த அரசாங்கத்திலிருந்து போட்டியிட்டார் . சரத் பொன்சேகா எதிரணியிலிருந்து போட்டியிட்டார்.

 2018 , ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசாங்கத்திலிருந்து போட்டியிட்டார். எதிரணியில் இருந்து மைத்திரிபால சிரிசேன  போட்டியிட்டார்.

அதன்படி,  ஜனாதிபதி தேர்தல்களில்  சந்திரிகா இரண்டு முறையும் , மஹிந்த இரண்டு முறையும், ரணில் இரண்டு முறையும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் சந்திரிகா இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் இரண்டு எதிர் வேட்பாளர்களை சந்தித்தார். எதிர்த்த இரண்டு வேட்பாளர்களையும் மகிந்த சந்தித்தார். இரண்டு எதிர் வேட்பாளர்களையும் ரணில் சந்தித்தார்.

ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இரண்டு புதிய வேட்பாளர்கள் 2019 ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டனர்.

ஐ.தே.க சார்பாக போட்டியிட்ட சஜித் போலவே , மகிந்த தரப்பிலான மொட்டு கட்சியிலிருந்து போட்டியிட்ட கோத்தபாயவும், ஜனாதிபதி தேர்தலில் முன்னர் போட்டியிடாத இரண்டு வேட்பாளர்களாகும்.

மேலும், இவர்கள் இருவரும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஏற்கனவே ஒன்றாக போட்டியிட்ட இரண்டு எதிரணி வேட்பாளர்களும் இரண்டாவது முறையாக போட்டியிடவிருக்கும் முதல் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரவிருக்கும் 2024 தேர்தல் களமாகும்.

‘கோட்டாவுக்கு எதிரான சஜித்தின் போராட்டம் பலம் பெறுமா?’

இன்றைய அரசு உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் முன்னணிக்கு (மொட்டு) ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். காரணம், இந்த வாய்ப்பு தவறினால், 2024 மக்கள் முன்னணி அரசாங்கம் எனும் பிணம் 2019 நல்லாட்சி அரசாங்கத்தின் பிணத்தை விடவும் துர்நாற்றம் வீசும் சடலமாக இருக்கும்.

2019 இல் சஜித் , நல்லாட்சியின் பிணத்தை தூக்கி காவ   முன்வந்தார், ஆனால் 2024 இல் மக்கள் கூட்டணியின் பிணத்திற்கு யாராவது முன்வருவார்களா என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாததுள்ளது. மாற்று எதுவும் இல்லை என்பதால், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிட வேண்டும் என பொதுஜன முன்னணி கூற வாய்ப்புள்ளது.

ஏனெனில் கோட்டாபயவை முன்னிறுத்துவதில் உள்ள ஒரே நன்மை ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற அதிகாரத்தை பயன்படுத்தும் திறன் கோட்டாபயவிடம் உள்ள ஒரு பலமாகும்.

எனவே, கோட்டாபயவை,  ஜனாதிபதி பதவிக்கு தள்ளுவதைத் தவிர ராஜபக்ச தரப்புக்கு வேறு வழியில்லை . ராஜபக்ச குடும்ப உள் ஆதாரங்களின்படி, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயதான் போட்டியிட வேண்டும் என மகிந்தவும் கருதுகிறார்.

‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , விமல், உதய கம்மன்பில மற்றும் வாசு ஆகியோரிடம் ராஜபக்சே குடும்பத்துக்கு தேவையான  வேட்பாளரைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் வழங்குவார்களா?’

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​ராஜபக்ஷக்கள் அரசியல் ரீதியாக பலவீனமான நிலையில் தள்ளப்பட்டு இருப்பார்கள் . அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல், உதய கம்மன்பில மற்றும் வாசு ஆகியோரின் பேரம் பேசும் சக்தி அதிகரித்து இருக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல், உதய மற்றும் வாசு ஆகியோர் ராஜபக்சே குடும்பத்திற்கு வெளியே இருந்து , அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது வேட்பாளரைத்தான் தேர்தலில் போட்டியிட  முன் நிறுத்த  வேண்டும் என்று பிடிவாதம் செய்தால் , ராஜபக்ச தரப்பு அதை எதிர்க்கவே அதிக வாய்ப்புள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல், உதய மற்றும் வாசு ஆகியோர்  இணைந்து வேறோர் வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்புகளே அதிகம் தெரிகிறது.

தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல், உதய மற்றும் வாசு ஆகியோரின் அனுசரணையுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியே இருந்து , ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கு ராஜபக்ஷக்கள் ஒப்புக்கொண்டாலும், அவர்கள் அதை முழு மனதுடன் ஏற்கப் போவதில்லை. ராஜபக்ச குடும்பம் அப்படியான   வேட்பாளரை தோற்கடிக்க அவர்களே சதி வேலையாக காலை இழுக்கும் வேலையை செய்வார்கள்.

ராஜபக்ச குடும்பத்தின் சொத்தான ,   தமது மொட்டு கட்சியை பாதுகாத்து, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், இதன்போது ராஜபக்ஷக்கள் தயங்க மாட்டார்கள்.

எப்படியிருந்தாலும், அரசாங்கம் இப்படியே  தொடர்ந்தால், 2024 ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது , வங்கி மோசடி (மத்திய வங்கி முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி ) மற்றும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற பிரச்சனைகள் இருந்தும் நல்லாட்சி சார்பாக போட்டியிட்ட சஜித் 55 லட்சம் வாக்குகள் பெற்றார். ஐதேக வங்கியை கொள்ளை அடித்தார்கள் எனும் கோசம் பிற்படுத்தப்பட்ட மக்களை இலகுவில் எரிச்சலடைய வைத்தது. அப்படி இருந்தும் சஜித் 55 லட்சம் வாக்குகளை பெற்றார்.

அதே சமயம் கோட்டாபய 69 லட்சம் வாக்குகளை பெற்றார்.

சஜித் , கோட்டாபயவை  வெல்ல இன்னும் 19 லட்சம் வாக்குகள் மட்டுமே தேவையாக இருந்தது. இளைஞர்களினதும் ,  மிதக்கும் வாக்குகளிலிருந்தும் வாக்குகளால்தான்  கோட்டாபய இந்த 19 லட்சம் வாக்குகளைப் பெற்றார். கோட்டாபய தற்போது  அந்த வாக்குகளையும் இழந்துவிட்டார்.

அது மட்டுமல்ல, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்த போது , மஹிந்த பெற்ற 57 லட்சம் வாக்குகள் கூட தற்போது கோட்டாபயவிடம் இல்லை. இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களுக்குள் மகிந்தவின் இமேஜை சிதைத்துவிட்டது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு முன்னர் புலி எதிர்ப்பு கோஷங்களுடன் மகிந்தவின் உருவம் பிரபலப்படுத்தப்பட்டது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய சக்திகளுக்கு தலைவணங்காமை மற்றும் உள்ளூர் வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்கவில்லை எனும் பிம்பம் ஒன்று இருந்தது.

ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, முஸ்லீம் எதிர்ப்பு உணர்வும் மகிந்தவின் உருவத்தை பிரபலப்படுத்திய ஒரு முழக்கமாக இருந்தது. இன்று, இந்த கோஷங்கள் எதுவும் மஹிந்தவிடம் இல்லை.

புலிகளின் ஆதரவு புலம்பெயர் தரப்புகளோடு  பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கோட்டா ஏற்கனவே கூறியுள்ளார். கெரவலப்பிட்டிய மின் நிலையம் அமெரிக்காவிற்கும், மேற்கு துறைமுக முனையம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சக்திகளுக்கு தலைவணங்கக் கூடாது எனும் முழக்கம் மற்றும் உள்ளூர் வளங்களை விற்கக் கூடாது எனும் முழக்கம் இரண்டையும் அது இல்லாது செய்துள்ளது.

அரசாங்கத்தின் முஸ்லீம்-விரோத கோஷம், முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களை அரசு சட்டங்களை நிறைவேற்ற இணைத்துக் கொண்டதன் மூலமும், முஸ்லிம் நாடுகளிடம் எண்ணெய் கேட்டும் ,  இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை தோற்கடிக்க ஆதரவு கேட்டு வலியுறுத்துவதியதன் மூலமும் நகைச்சுவையாக மாறியுள்ளது.

எனவே, மஹிந்தவின்  பிம்பத்தை வைத்து மீண்டும் வாக்குகளைச் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், சஜித்தின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது எதிரிகள் 2024 ஜனாதிபதித் தேர்தல் சஜித்துக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும் என்பதை அறிவார்கள்.

அரசாங்கத்தால் ஆட்சி செய்ய முடியாவிட்டால் தேர்தலை நடத்துமாறு சஜித் பாராமன்றத்தில் கூறியபோது, ​​தேர்தல் ஒன்று நடந்தால்  சஜித் இலகுவாக வெல்வார்  என்று தெரிந்தே அனுரகுமார திணரலுக்கு ஆளாகி , இப்போது தேர்தல் வேண்டாம் என கதறத் தொடங்கினார்.

ஒரு அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கும் போது ,  தேர்தலை நடத்தச் சொல்வது பொதுவான எதிர்க்கட்சிகளின் கடமையாகும்.

1983ல் ,  வடக்கில் ஜேஆரால் போரை முடிக்க முடியாது போனால்  . உடனடியாக தேர்தலை நடத்துமாறு அன்றைய எதிர்க்கட்சியிலிருந்த அணுர மற்றும் ஶ்ரீமாவோ ஆகியோர் அரசிடம் கூறினர். அன்றைய  ஜேவீபீ தலைவர் விஜேவீரவும் தேர்தலை நடத்துங்கள் எனக் கூறினார்.

2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து சிறிது  காலத்துக்குள் , புலிகள் கொழும்பில் நுழைந்து,  யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது , ​​சந்திரிகா உலகின் உதவிக்காக கூக்குரலிட்டார், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் நாட்டைப் பாதுகாக்க முடியாவிட்டால் தேர்தலை நடத்தி அரசாங்கத்தை தம்மிடம் ஒப்படைக்கச்  சொன்னார்.

அதே போன்றதொரு கதையை ஈஸ்டர் தாக்குதல் நேரத்திலும் மஹிந்த சொன்னார். ஒரு அரசாங்கத்தால் ஆட்சி செய்ய முடியாவிட்டால், தேர்தலுக்குச் செல்வதே ஒரே தீர்வு என்றார்.

சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும்  என்ற பயத்தில் அனுரகுமார திசாநாயக்க , சஜித் தேர்தலை வைக்கச் சொன்னபோது அதை தாக்கி பேசத் தொடங்கியுள்ளார்.

அனுர மட்டுமல்ல ரணில் மற்றும் என்ஜிஓக்களும் சஜித் 2024 பெரியதொரு வெற்றியை பெறுவார் என பயப்படுகிறார்கள். அதனால்  அரசாங்கத்தினை கட்டுப்படுத்தும் தன்மையை தாங்கள் இழந்து போவோம் என அஞ்சுகிறார்கள்.

எனவே
‘சஜித் பலமற்றவர்,
சஜித் சரியில்லை,
சஜித்திடம் எந்த திட்டமும் இல்லை …
சஜித்தின் புகழ் குறைந்துவிட்டது’

இப்படி புலம்புவோர் அதிகமாகியுள்ளனர். இவர்கள் சஜித்தின் வெற்றி பயத்தால் பாதிக்கப்படுபவர்கள்தான். அவர்கள் இன்று ராஜபக்சவின் ஹீரோக்கள். இவர்கள் ராஜபக்சேவுக்கு ஆதரவான  ஊடகங்களின் மூலம் ,   சஜித்தை தாக்கி  ஒரு போரை நடத்தியாவது ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தி  வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

ரணில், அனுர மற்றும் என்ஜிஓக்கள் சஜத்தின் கட்சிக்குள் உள்ள ஒற்றுமை உடைவதை உற்சாகப்படுத்த காத்திருக்கிறார்கள். எப்படியிருந்தாலும், அனுர ,  பிரேமதாசாவுக்கு பயப்படுகிறார். ஏனென்றால் ஜேவிபியைப் போலவே, பிரேமதாசவும் பிற்படுத்தப்பட்ட கிராம சமூகங்களால்  ஈர்க்கப்பட்டவர்களாவார்கள்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியியை பலவீனப்படுத்தி, 2024 ற்கான ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தங்களுக்கு ஏதுவான ஒருவர் வசம் மாற்றுவதற்கு ராஜபக்சேவுக்கு மறைமுகமாக கை கொடுக்க இவர்கள் திரை மறைவில் செயல்பட்டு  வருகின்றனர்.

2015 இல் போல , அமெரிக்காவும் இந்தியாவும் அவர்களுக்கு பின்னால் வருவார்கள் என இவர்கள் கனவு காண்கிறார்கள்.

2024ல் அமெரிக்காவும் இந்தியாவும்  ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப தேவையில்லை. அதை மக்களே வழிநடத்துவார்கள். அது மக்கள் வாக்குகளால் எதிர்க்கட்சித் தலைமையை வென்ற ஒரு தலைவரால் மட்டுமே முடியும். அவரே  அடுத்த கட்ட மக்கள் தலைமையிலான போராட்டத்தின் தலைவராகவும் இருக்க முடியும்.

  • உபுல் ஜோசப் பெர்னாண்டோ (குருதா விக்ரகய)
  • தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.