கொலைக் குற்றத்தில் சிக்கிய திமுக எம்.பி- வருத்தப்பட்ட ஸ்டாலின்!

ஆளும் கட்சி  பிரமுகர்கள் கொலைக்குற்ற வழக்கில் சிக்கும் போது அது ஆளும் கட்சிக்கு அவப்பெயராக மாறி விடுகிறது. அப்படித்தான் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியிருக்கிறார் திமுக கடலூர் எம்.பி டி.வி.ஆர். ரமேஷ்

கடலூர் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில்  ரமேஷ் முந்திரி ஆலை உள்ளது. மேலும்  சில ஆலைகளை நடத்தும் ரமேஷுடைய ஆலைகளில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆலைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள்.

பண்ருட்டி பணிக்கன் குப்பத்தில் செயல்படும் ரமேஷின் ஆலைக்குப் பெயர் காயத்ரி கேஷுவஸ் இங்கு மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜு என்பவர் ஏழு ஆண்டுகளாக பணி செய்து வருகிறார். இவர் செப்டம்பர் 19-ஆம் தேதி வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அவருடைய மகனுக்கு முந்திரி ஆலையில் இருந்து உங்கள் தந்தை (கோவிந்தராஜு) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் சென்றிருக்கிறது.

தகவலறிந்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று கோவிந்தராஜுவின் மகன் தந்தையின் உடலைப் பார்த்த போது உடலில் காயங்கள் இருக்க போலீசில் புகார் அளித்தார். மொபைலிலும் படம் பிடித்து பலருக்கும் அனுப்பியும் உள்ளார்.

போலிசார் புகாரை ஏற்காத நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இதில் தலையிட்டு அக்கட்டி வழக்கறிஞர் பாலு தலைமையில் பாமகவினர் மறியல் செய்ய சந்தேக மரஅம் என்று வழக்கரிஞர்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட சிலர் மீது வழக்குப் பதிந்தனர். பாட்டாளி மக்கள் கட்சியினரும் காவல்துறையினரும் முதலில் கோவிந்தராஜுவின் மரணத்திற்கு செட்டில் மெண்ட் கேட்க  எம்.பி ரமேஷ் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில் பாமக நிறுவனர் ராமதாஸ்  அறிக்கை விட பிரச்சனை பெரிதானது. கோவிந்தராஜ் ரமேஷின் நிறுவனத்தில் முந்திரியை திருடி வெளியில் விற்று வந்ததாகவும் அது தெரிந்தவுடன் கோவிந்தராஜை அழைத்து ரமேஷ் அவரை அடிக்க அவர் அடித்த உடன் அவரது ஆட்களும் அடிக்க அவர் இறந்து விடுகிறார். பின்னர் அவர் வாயில் விஷம் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்போது பிரேதப்பரிசோதனை ரிப்போர்ட்டும் கொலையை உறுதி செய்ய ரமேஷ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகிறார்கள். அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளை அழைத்து வருத்தப்பட்டிருக்கிறார். நான் கடினமாக உழைத்து என் சந்தோசங்களைக் குறைத்துக் கொண்டு கட்சிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க உழைக்கிறேன். ஆனால் உங்களில் சிலர் அதிகாரம் கையில் இருக்கிறது என்று ஆடாத ஆட்டம் ஆடுகின்றீர்கள். என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

விரைவில் கடலூர் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் வரலாம் என்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.