நெதர்லாந்து, நோர்வே உயர்ஸ்தானிகர்கள் கிழக்கு ஆளுநரை சந்தித்தனர்.
இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோர் இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களை திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ள அபிவிருத்தி செயல்பாடுகளில் முதன்மையாக தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.