இலவசமாக விதை நெல் வழங்கி வைப்பு.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கெளதாரி முனை பிரதேசத்தில் காணிகளற்ற மக்களுக்கு வழங்கப்பட்ட 100 ஏக்கர் காணிகளில் விதைப்பு நடவடிக்கைக்காக கமநல சேவைகள் திணைக்களம் இலவசமாக விதைநெல்லினை வழங்கிவைத்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் கௌதாரிமுனை பிரதேச காணிகளற்ற மக்களுக்கு சுமார் 100 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

இக்காணிகளில் விதைப்பு நடவடிக்கையினை மேற்கொள்வதற்கான விதை நெல் மூடைகளினை கமநலசேவை திணைக்களம் அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கிவைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.