ஐபிஎல் 2021 விருதுகள்: முழுப்பட்டியல் விபரம்.

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான பல விருதுகளை சிஎஸ்கே அணி வென்றுள்ளது.

🛑சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ்

🛑இறுதிச்சுற்று ஆட்ட நாயகன்: டு பிளெஸ்சிஸ் (சிஎஸ்கே)

🛑மதிப்புமிக்க வீரர் (போட்டி நாயகன்): ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)

🛑ஃபேர்பிளே விருது: ராஜஸ்தான்

🛑வளரும் வீரர்: ருதுராஜ் (சிஎஸ்கே

🛑அதிக சிக்ஸர்கள்: கே.எல். ராகுல் (பஞ்சாப்)

🛑சூப்பர் ஸ்டிரைக்கர்: ஹெட்மையர் (தில்லி)

🛑பவர்பிளேயர்: வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா)

🛑சிறந்த கேட்ச்: பிஸ்னோய் (பஞ்சாப்)

🛑கேம் சேஞ்சர்: ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)

🛑அதிக ரன்கள்: ருதுராஜ் கெயிக்வாட் (சிஎஸ்கே)

🛑அதிக விக்கெட்டுகள்: ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)

Leave A Reply

Your email address will not be published.