பெருமையாக இருக்கு: கொல்கத்தா கேப்டன் மோர்கன் ஆறுதல்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2014 ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது. 3-வது பட்டத்துக்காக போராடிய கொல்கத்தா அணி 27 ரன்களில் சிஎஸ்கே அணியிடம் தோல்விஅடைந்தது

ஐபிஎல் டி20 இறுதிப்போட்டியி்ல சிஎஸ்கே அணியிடம் தோற்றாலும் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம், செயல்பாடு ஆகியவற்றை நினைத்து பெருமையாக இருக்கிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி்ன் கேப்டன் மோர்கன் தெரிவி்த்தார்.

இந்தியாவில் நடந்த இந்த சீசனின் முதல் சுற்றில் 7 போட்டிகளில் 2 வெற்றிகள,் 5 தோல்விகள் என பின்தங்கியிருந்தது கொல்கத்தா அணி. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் கொல்கத்தா அணியினரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது.

ஒவ்வொரு போட்டியிலும் ஆக்ரோஷமான பேட்டிங்கையும், பந்துவீச்சையும் கையாண்டது இறுதிப்போட்டி வரை முன்னேற காரணமாக அமைந்தது.

இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து கேப்டன் மோர்கன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் போராடிய விதம், விளையாடியவிதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். எங்கள் விடாமுயற்சியும், போராட்டமும்தான் எங்களின் அடையாளம். எங்கள் அணியில் உள்ள வீரர் அற்புதமாக விளையாடினார்கள், சிறப்பாகச் செயல்பட்டார்கள்.

வெங்கடேஷ், ஷுப்மான் கில் ஆட்டம் பிரமாதமாக இருந்து. அதிலும் வெங்கடேஷுக்கு ஐபிஎல் புதிய அணுபவம். அவரின் ஆட்டம் எங்களின் தரமான பேட்டிங்கிற்கு அடையாளமாக இருந்தது. திரிபாதி காயத்தால் விளையாட முடியாமல் போனது பெரிய இழப்பாக இருந்தது. “

Leave A Reply

Your email address will not be published.