தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எவரும் நாட்டிற்கு வரலாம்.

கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் வரும் நவம்பர் 8 ஆம் திகதி முதல் தங்களது நாட்டுக்குள் வரலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதன்படி ,இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெவின் முனோஸ், சாலை மற்றும் வான் வழியாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று கூறினார். உலக சுகாதார அமைப்பால் அவசர காலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்ட எந்த ஒரு தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பயணிகளும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ,கப்பல் மூலமாக வரும் பயணிகள் மற்றும் எல்லை வழியாக வரும் அகதிகளுக்கும் இதே விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.