பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரை சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பாஜக பிரமுகரான கல்யானராமன் சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களை சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும் திரைப்பட நடிகை மருத்துவர் ஷர்மிளாவை ஆபாசமான முறையில் பேசியுள்ளார், அந்த வகையில் திமுகவின் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர், மருத்தவர் ஷர்மிளாவை ஆபாசமாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே அவரை உடனே கைது செய்யவேண்டும் என
சென்னை சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்ட 10 மணிநேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.உசென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.