கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளம் : ஆற்றோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்ததைத் தொடர்ந்து, தாழ்வான பகுதிகள், வீடுகளில் சூழ்ந்த தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கம்பங்கள் அமைந்துள்ள பகுதிகள், ஆற்றோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரியில் நேற்று முதல் மழை பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப் படும் உபரிநீரின் அளவு குறைந்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 5892 கன அடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 4852 கன அடி நீரும், சிற்றார் ஒன்று அணையில் இருந்து வினாடிக்கு 272 கன அடி நீரும், சிற்றார் 2 அணையில் இருந்து வினாடிக்கு 224 கன அடி தண்ணீர் மட்டுமே தற்போது வெளியேற்றப்படுகிறது.

இதனால் கோதையார், தாமிரபரணி மற்றும் பரளியாற்றிலும் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் குடியிருப்புகளில், விளை நிலங்களில் புகுந்த தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் விடுமுறை அறிவித்துள்ளார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 16 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த பேச்சிபாறை அணையில் இருந்து 5892 கன அடியாக குறைக்கபட்டுள்ளது. அது போன்று பெருஞ்சாணி அணையிலிருந்து 4852 கன அடியாக குறைக்கபட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரைகளில் தண்ணீர் வடிந்தாலும் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி விவசாயம் நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திக்குறிச்சி பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் வாழை, மரிச்சினி , காய், கனிகள் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் தண்ணீர் முழ்கி காணபடுகிறது. இது போன்று அஞ்சாலிகடவு, வைக்கலூர், பரக்காணி பகுதிகளிலும் ரப்பர் தோட்டங்கள், வாழை போன்ற விவசாய நிலங்கள் தண்ணீர் மூழ்கி காணபடுகிறது. இதனால், இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து 10மின் மாற்றிகளும் பழுதடைந்த நிலையில் அதை பராமரிக்கும் பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கம்பங்கள், ஆற்றின் தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.