வங்கி ஊழியர் சங்கத்தினரால் வைத்தியசாலைக்கு உதவி.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சமூக நலத்திட்ட நிதிப்பங்களிப்பில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை விடுதியின் அவசர சிகிச்சை பிரிவுக்கு சுமார் 14 லட்சம் ரூபாய் பெறுமதியான High Flow Oxygen Ventilator இயந்திரம் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரனின் தலைமையில் சுகாதார நடைமுறைகளுடன் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று (18) மாலை நடைபெற்றது .

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பாலித்த எட்டம்பாவல, சங்கத்தின்செயலாளர் பி.எச் . உதய இமல்சா, உப தலைவர் அனுராத நிராஜ், சிரேஷ்ட உதவிச் செயலாளர் டீ.பீ. கார்த்திக் , கல்முனை பிராந்திய தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஷ் , கல்முனை ஆதார வைத்தியசாலையின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி ஜெ.மதன், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ். சந்தியாகு, இலங்கை வங்கி ஊழியர் சங்க பிரதிநிதிகள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பாண்டிருப்பு மகாவித்தியாலய அதிபர் சி.புனிதன், உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் தனவந்தர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர் .

குறித்த இயந்திரம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கிடைப்பதற்கு முழு மூச்சாக செயற்பட்ட இலங்கை வங்கி உத்தியோகத்தர் தனுபாலரெட்ணம் பிரபாகர் நன்றியுரை நிகழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.