பாபர், ஃபகர் அதிரடியில் மேற்கிந்திய தீவை வீழ்த்தியது பாகிஸ்தான்!

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 28 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி, ஹாரிஸ் ராவூஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம் – ஃபகர் ஸமானின் அதிரடியான ஆட்டத்தினால் 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதில் பாபர் அசாம் 50 ரன்களையும், ஃபகர் ஸமான் 46 ரன்களையும் சேர்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.