பரீட்சார்த்த மாதிரி வாக்குச் சாவடி சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மாதிரி வாக்குச்சாவடி ஒன்றை பரீட்சார்த்த முறையில் விரைவில் நடத்தப் போவதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசபிரிய கூறியுள்ளார்.

சுமார் 200 வாக்காளர்களின் பங்களிப்புடன் இந்த மாதிரி வாக்குச் சாவடி இன்று (05) அல்லது நாளை (06) நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கைகளை கழுவுவதற்கான வசதிகள் உட்பட அனைத்து சுகாதாரத் தேவைகளும் இந்த நிலையத்திற்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Comments are closed.