ஐக்கிய தேசிய கட்சியில் இரண்டு கட்சிகள் இல்லை – ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியில் இரு கட்சிகள் இல்லையென தெரிவித்துள்ள அதன் தலைவர், அக்கட்சி என்பது ஒரே ஒரு கட்சி மட்டும் தான் என குறிப்பிட்டுள்ளார்.

அவிசாவலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இவ்வாறு தெரித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி என்பது ஒரு கட்சி மாத்திரமே என நீதிமன்றம் அறிவித்துள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால், தமக்கு வாக்களிக்குமாறு கேட்டக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, தமக்கு எதிரானவர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் எதிரானவர்களென குறிப்பிட்டுள்ளார்.

கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம் திரும்பும் நோக்கத்திலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.