ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு வங்கியால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு கொமர்சல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியத்தால் 28 லட்சத்து ஆயிரம் ரூபா பெறுமதியான இரத்த வாயு எலக்ட்ரோலைட் அனலைசர் (1 Blood Gas & Electrolyte Analyzer), நொன் இன்வாசிப் வென்டுலேற்றர் (1 Non Invasive Ventilator), உறைதல் பகுப்பாய்வி (1 Coagulation Analyzer) என்பன கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கொமர்சல் வங்கியின் தவிசாளரும் முன்னாள் பிரதம நீதியரசருமாகிய ஸ்ரீPபவன், கொமர்சல் வங்கியின் நிர்வாக இயக்குநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநரின் ஆலோசகருமாகிய லயன் எஸ்.ரெங்கநாதன், வேலணை கொமர்சல் வங்கியின் முகாமையாளர் லயன் கே.சதீஷ் ஆகியோர் இணைந்து ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரிடம் வழங்கிவைத்தனர்.

இதேவேளை, கொமர்சல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியத்தால் கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலை என ஒரு கோடி ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.