அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நேவி கமல் கைது

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட முன்னாள் கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நேவி கமல் ,  9 வருடங்களின் பின்னர் பசறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் இவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், சிஐடியை மீறி சுமார் ஒன்பது வருடங்களாக பொய்யான பெயர்கள் மற்றும் முகவரிகளில் ஒளிந்திருந்தார்.அவர் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கடற்படை புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் போதே கடற்படையின் புலனாய்வுப் பிரிவை பாவித்தும் , கடற்படையினரில் சிலரது உதவியை பெற்று வந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி 87 பேர் கொண்ட குழுவொன்று நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தருஷ புத்தா என்ற  கப்பலில் போகும் வழியில்  ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் கடலில் தத்தளித்த போது அந்தோனி என்ற மற்றோர் கப்பலை அனுப்பி சட்டவிரோதமாக  ஆட்களை கடத்திச் சென்றுள்ளதாக புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.