மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்.

மின்சார பாவனையாளர்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வழியனுமதி, மரங்களை வெட்டுதல் அல்லது வெட்டி அகற்றுதல், நஷ்டயீட்டு கொடுப்பனவு மற்றும் நஷ்டயீட்டு நிர்ணயம் தொடர்பான வழிகாட்டல்கள் தொடர்பாக பிரதேச செயலர்களுடனான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(03) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை மக்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இத் துறைசார்பாக பிரதேச செயலாளர்களுக்குரிய வகிபங்குகள் தொடர்பாக இலங்கை மக்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகார பிரிவின் பிரதிப்பணிப்பாளர் ரோஷன் வீரசூரிய அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக மின்மார்க்கம் தொடர்பாக வழியனுமதி, மரங்களை அல்லது மரக்கிளைகளை வெட்டுதல் மற்றும் நஷ்டயீட்டினை தீர்மானித்தல், நஷ்டயீட்டினை வழங்குதல் தொடர்பான வழிகாட்டலின் புதிய தொகுப்புக்கள் சம்பந்தமாக பிரதேச செயலாளர்களிற்க விளக்கமளிக்கப்பட்டு அவாகளது கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.

மேலும் மக்களது பிரச்சினைகளை தீhப்பதற்காக உருவாக்கப்பட்ட குறித்த ஆணைக்குழு இதுவரை மக்கள் மற்றும் பிரதேச செயலாலர்களது ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு நான்காவது தடவையாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இக் கலந்தரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.