அலரி மாளிகையில் சிறப்புற இடம்பெற்ற தீபாவளிப் பண்டிகை நிகழ்வு.

நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக –

இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்‌ஷ அவர்களின் வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில் –

இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தேறியது.

சிறப்புமிகு இந்த நிகழ்வின் முதல் தீபத்தை, பிரதமரின் பாரியார் சிராந்தி ராஜபக்‌ஷ அம்மையார் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்வின் விசேட அம்சமாக – இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் -இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சுபீட்சமானதொரு எதிர் காலம் நோக்கிய பயணத்திற்குத் துணை செய்யும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றபுதிய பாடத்திட்ட நடைமுறைக்கு அமைவாக வெளிடப்பட்ட –

இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியன, பிரதமர் அவர்களால், நிகழ்விலே கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைத் திருநாட்டின் மக்களது சமய சக வாழ்விற்கான ஒரு அடையாளமாக – இந்த சிறப்பு மிகு நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.