அரசாங்க தரப்புடன் இணைய , SJB MP இரண்டு பார் பர்மிட்களை பெற்று .. இரண்டு கோடிக்கு விற்றுள்ளார்.

மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியான தமிழ் கட்சி எம்.பி ஒருவர் இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்ற அதே இரண்டு அனுமதிப்பத்திரங்களையும் கண்டி திகன பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் இருவருக்கு இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களையும் அரசாங்கத்துடன் இணைவதாகக் கூறி அவர் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல் வெளியாகியதையடுத்து, திகன பிரதேசத்தில் உள்ள பௌத்த தேரர் ஒருவர் , உரிய அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற வர்த்தகர்களை அழைத்து இது தொடர்பில் கேட்ட போது , எம்.பி.தான் இந்த உரிமங்களை வழங்கியதாகச் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமும் பௌத்த தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.