சுமாா் 30 வருடங்களுக்கு பின், இலங்கைக்கு நேரடி விமான சேவை.

இலங்கைக்கு எயார் பிரான்ஸ்“ விமான சேவை. சுமாா் 30 வருடங்களுக்கு பின்னா், இலங்கைக்கு முதல் தடவையாக நேரடிப் பயணிகள் விமானச் சேவை இன்று ஆரம்பமாகியது.

முதல் சேவையை மேற்கொள்ளும் விமானம் இன்று பிற்பகல் 1.25க்கு இலங்கையை வந்தடைந்தது.

அதேநேரம் கட்டுநாயக்கவில் இருந்தும் பாாிஸூக்கான முதல் விமானம் இன்று புறப்படவுள்ளது. வாரத்துக்கு மூன்று தடவைகள் இந்த சேவை கொழும்புக்கும் பாரிஸூக்கும் இடையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் பாரிஸில் இருந்தும் திங்கள், வியாழன், சனி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தும் சேவைகள் இடம்பெறும்.

Boeing 787-9 விமானம் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் 279 பயணிகள் பயணிக்க முடியும்., இதில் 30 seats in Business, 21 Premium Economy. ஆசனங்கள் உள்ளன.

இதேவேளை கொரோனாத் பெருந்தொற்றுக்கு பின்னா் சுவிஸ் எயாா் இன்று தமது சேவையை கொழும்புக்கு ஆரம்பித்துள்ளது. சூாிச்சில் இருந்து முதல் விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் முற்பகல் தரையிறங்கியது.

Leave A Reply

Your email address will not be published.