சுவிஸ் – இலங்கை இடையே ஒவ்வொரு வெள்ளியும் நேரடி விமான சேவை….

சுவிட்சர்லாந்தின் சுவிஸ் சர்வதேச விமான சேவையின் ஆரம்ப விமானம் நேற்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 96 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் விமானி உட்பட 12 பணியாளர்களும் வருகை தந்தனர்.

நேற்று முதல், சுவிஸ் சர்வதேச விமானம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சூரிச் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமானப் பயணங்களை மேற்கொள்ள உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.