பைசர் உருவாக்கியுள்ள மாத்திரை 89% கொவிட் அபாயத்தை தடுத்து , தடுப்பூசி கதையை முடித்துள்ளது

கோவிட் அபாயத்தை 89% குறைக்கும் கேப்ஸ்யூல் அல்லது மாத்திரையை ஃபைசர் உருவாக்கியுள்ளது. அதன் பின் கோவிட்டை தடுக்க மேற் கொள்ளப்பட்டு வந்த ஏனைய பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஃபைசரின் கூற்றுப்படி, இது கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அல்லது இறப்பு எண்ணிக்கையை 89% குறைக்கிறது என்கிறது.

இந்த ஆராய்ச்சி தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த மாத்திரை பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தடுப்பூசி பந்தயத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கோவிட் நோய்க்கான மாத்திரை/காப்ஸ்யூல் ஏன் தயாரிக்க முடியாது என்பது குறித்து நீண்ட காலமாக கவனம் செலுத்தப்பட்டு வந்தது.

Pfizer க்கு முன்பு, Merck & Co Inc. இதேபோன்ற மாத்திரையை தயாரிக்க முயற்சித்தது, ஆனால் இப்போது ஃபைசர் ஒரு மாத்திரை / காப்ஸ்யூலுக்கான போட்டியில் வெற்றியடைந்துள்ளதாக தெரிகிறது.

இந்தச் செய்தியால், ஃபைசர் நிறுவனத்தின் பங்கு விலை 11% அதிகரித்து, ஊசி தயாரிப்பு நிறுவனங்களான மொடர்னா மற்றும் பயோன்டெக் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த மருத்துவத் தரவை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க ஃபைசர் தற்போது தயாராகி வருகிறது. இந்த மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் 1,219 நோயாளிகளைப் பயன்படுத்தினர். உடல் பருமன் அல்லது முதுமை போன்ற கோவிட் தீவிரத்தின் ஒரு காரணத்துடன், லேசான அல்லது மிதமான கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

28 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவரும் இறக்கவில்லை என ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் மற்றும் இரண்டு டோஸ்கள் கொண்ட பூஸ்டரை எடுக்க வேண்டிய அவசியம் போன்ற முக்கியமான தலைப்புகளில் ஃபைஸர் இறுதியாக வெற்றி பெற முடிந்தது.

வைரஸ் தடுப்பு மாத்திரை கடுமையான COVID-19 ஆபத்தை 89% குறைக்கிறது என ஃபைசர் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.