மழை காரணமாக 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு.

நாட்டில் நிலவும் மழை காரணமாக 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகளும், தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொல்கொல்ல மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கங்களின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.