குடியேற்றவாசிகள் நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது.ஐரோப்பிய ஒன்றியம்.

குடியேற்றவாசிகள் விவகாரம்; பொலரஸ் மீதான தடைகளை தீவிரப்படுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம்!

பெலாரஸ் மற்றும் போலாந்து நாடுகளுக்கு இடையிலான குடியேற்றவாசிகள் நெருக்கடியை பெலாரஸ் தீவிரப்படுத்தி வருவதால் அந்நாட்டின் மீதான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தீவிரப்படுத்தவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திர அதிகாரிகளில் ஒருவரான ஜோசப் போரெல் இத்தடை விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் குடியேறிகள் பிரச்சனை தீவிரமடைந்து வருவதாகவும், பாதிக்கப்படும் நிலையில் உள்ள குடியேறிகள் இப்போரில் சுரண்டப்படுவதாகவும் கூறினார்.

தனது நாட்டுக்குள் இருக்கும் குடியேறிகளை எல்லையை நோக்கி வெளியேற்றி பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படுத்துவதாக பொலாரஸ் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

ஆனால் அதை பெலாரஸ் மறுக்கிறது. ஒரு பக்கம் பெலாரஸ் நாட்டுப் படை மறுபக்கம் போலாந்து நாட்டுப் படைக்கு மத்தியில் குடியேறிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

பெலாரஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் குடியேறிகள் போலாந்து நாட்டுக்குள் நுழைய முடியவில்லை, அதே நேரம் பெலாரஸ் நாட்டுக்குள் மீண்டும் நுழைவதற்கும் அனுமதிக்கவில்லை.

இதனால் பெண்கள், குழந்கைள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இரு நாடுகளில் எல்லைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ளனர்.

சமீபத்திய மாதங்களில் பெலாரஸில் இருந்து சட்டவிரோதமாக தங்கள் நாடுகளுக்குள் நுழைய முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போலந்து, லிதுவேனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் கூறுகின்றன.

இவ்வாறு நுழைய முயலும் பலர் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளைச் சோ்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடைகளுக்குப் பழிவாங்கும் வகையில் புலம்பெயர்ந்தோர் ஊடுருவலை பெலாரஸின் சர்வாதிகார ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ எளிதாக்கியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை, பெலாரஸில் இருந்து சட்டவிரோதமாக போலந்துக்குள் நுழைய முற்படும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் உயிர் ஆபத்துக்களை எதிர்கொள்ளக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் காலநிலை மிக மேசமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு போலந்து நோக்கி வரும் பலர் எல்லைகள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் போலந்தின் காடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். பலர் கடும் குளிரால் உயிரிழந்துள்ளனர்.

சாப்பிடுவதற்கும் உணவின்றியும் குடிக்க நீர் இல்லாமலும் புலம்பெயர்ந்தவர்கள் பெருமளவானோர் எல்லையில் சிக்கித் தவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.