தாயின் கைகளிலிருந்து நழுவி உலோகக் கூரையில் விழுந்த குழந்தை மீட்பு (Video)

சென்னை: ஏழு மாத பெண் குழந்தை ஒன்றை ஓர் உலோகக் கூரையிலிருந்து காப்பாற்ற எத்தனை பேர் தேவை?

ஒரு டஜனுக்கும் மேல், சென்னையில் மீட்கப்பட்ட குழந்தையின் இரண்டு நிமிட
சமூக ஊடகத்தில் பரவிய காணொளியின் தொடக்கத்தில், 14 முதல் 15 பேர் கொண்ட குழு ஒரு பெரிய விரிப்பை வைத்திருப்பதைக் காணலாம். இரண்டாவது மாடிக் குடியிருப்பின் உலோகக் கூரையில் குழந்தை இருப்பதையும் காண முடிகிறது.

விரிப்புக்கு அடியில் பலர் ஒரு மெத்தையைப் பிடித்திருக்கும் நிலையில், பின்னணியில் சிலர் கூச்சலிடுவதைக் கேட்க முடிகிறது.

இருவரின் உதவியோடு அக்குடியிருப்பின் மேல்மாடத்திலிருந்து ஏறிய ஆடவர் ஒருவர், ஒரு கையால் அக்குழந்தையைப் பிடித்துத் தூக்கி அங்கிருந்த மற்றவர்களிடம் கொடுத்தார்.

உள்ளூர் காவல்துறையை மேற்கோள்காட்டிய இந்திய ஊடகங்கள், நான்காவது மாடிக் குடியிருப்புக்கு வெளியே ஒரு துடைப்பத்தை எடுக்க அக்குழந்தையின் தாயார் எட்டியபோது, அவர் தூக்கி வைத்திருந்த குழந்தை கைகளிலிருந்து நழுவி உலோகக் கூரையில் விழுந்ததாகத் தெரிவித்தன.

அக்குழந்தைக்கு கை, காலில் சிறு காயங்கள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டது. இச்சம்பவத்தில் சூது இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கவில்லை.

இந்தக் காணொளி எக்ஸ், இன்ஸ்டகிராம், டிக்டாக் தளங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.