அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய 1008 சங்காபிசேகம்!

கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆரையம்பதி, மாவிலங்கத்துறை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய 1008 சங்காபிசேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு தெற்கே மாவிலங்குத்துறையில் பன்னெடுங்காலமாக வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமாகி கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலையில் ஆரம்பமான கும்பாபிசேக கிரியைகளை தொடர்ந்து அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகள் நடைபெற்று, மஹாகும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து 22 நாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து 23 ஆம் நாளாகிய நேற்று மாவிலங்கத்துறை வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடப்பவனி இடம்பெற்றதனைத் தொடர்ந்து
1008 சங்காபிஷேகம் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ஆலய சங்காபிசேக உற்சவங்கள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.