இளம்பெண்ணின் கழுத்துக்குள் குத்திய 7.5 செ.மீ தையல் ஊசி.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய கோவை மருத்துவர்கள்

கோவையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணின் கழுத்தில் இருந்து 7.5 செ.மீ நீளமுள்ள ஊசியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

கோவை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2 ம் தேதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அந்த பெண்ணை மீட்ட குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பெண்ணிற்கு கழுத்து அறுக்கபட்டதிற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடுமையான கழுத்து வலி இருந்த நிலையில் சந்தேகமடைந்த அரசு மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது கழுத்து தண்டுவடத்திற்கு அருகே நீண்ட தையல் ஊசி ஒன்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் அவரிடம் கேட்டபோது தற்கொலை செய்துகொள்ள தான் அந்த ஊசியை முதலில் கழுத்தில் குத்தியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்த போது மூச்சு குழாயில் இருந்து கழுத்து தண்டுவடத்திற்கும் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்க்கு அருகே இந்த தையல் ஊசி இருப்பது தெரியவந்தது.

அறுவை சிகிச்சை செய்து ஊசியை எடுப்பது என்பது சவாலானது என உணர்ந்த மருத்துவகுழுவினர், தண்டுவட மருத்துவர்கள், ரத்த நாள மருத்துவர்கள் ,காது மூக்கு தொண்டை மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள் என ஒன்றிணைந்து அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த செய்து 7.5 சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசியை நீண்ட ஊசியை அகற்றினர்.தற்போது அந்த பெண் உடல்நலம் தேறி நன்றாக இருப்பதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.