தென்னிலங்கையில் கிறிஸ் பேய்?

காலி மாவட்டத்தில் நெலுவ உள்ளிட்ட சில பிரதேசங்களில் இரவு நேரங்களின் போது நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபரை (கிறிஸ் யகா/ கிறிஸ் பூதம்) கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக நெலுவ மற்றும் ஹினிதும பொலிஸ் பிரிவுகளிலுள்ள வீடுகளுக்கு நிர்வாணமாக நுழையும் நபர்கள் அங்குள்ளவர்களை அச்சுறுத்தி வருவதாக பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிறிஸ் பேய் அல்லது பூதங்களின் நடமாட்டம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை இதனுடன் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிப்பதில் பொலிஸார் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.