இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான சேவை.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான சேவை நிறுவனமாக (fly Lankan Asia) ஃப்ளை லங்கன் ஆசியாவை இயக்குவதற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட முதலீட்டாளர் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளார். இந்த விமான சேவை குறைந்த கட்டண விமான சேவையாக இடம்பெறவுள்ளது.

இந்தியா, மாலத்தீவுகள், இந்தோனேசியா (2-3 நகரங்கள்), மலேசியா (2 நகரங்கள்), மியான்மர் மற்றும் துபாய் போன்ற இடங்களுக்கு பிராந்திய கரியராக Fly Lanka Asia செயல்பட உள்ளது, விமான நிறுவனத்தின் CEO Dr. அரோஷா பெர்னாண்டோ பிஸ்னஸ் ரைம்ஸிடம் கூறினார்.

விமான சேவையானது இரத்மலானை மற்றும் கட்டுநாயக்க, மத்தளைக்குமான விமான சேவை நடவடிக்கையாகவும் பயன்படுத்தும்.

ஜனவரி 1 முதல், ஃப்ளை லங்கன் ஆசியா கென்யாவிலிருந்து 160-190 பயணிகள் தங்கக்கூடிய போயிங் 737 விமானத்தையும், இன்னும் ஐந்து விமானங்களை வாங்குவது குறித்தும் ஆலோசித்து வருவதன் மூலம் அதன் நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று Dr அரோஷா பெர்னாண்டோ விளக்கினார்.

அத்துடன் மார்ச் தொடக்கம் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு விமான நிலையத்துக்கும் சேவையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதற்காக 20-30 இருக்கைகள் கொண்ட ஒரு விமானம் ஒதுக்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.