தப்பியது கூட்டமைப்பின் பருத்தித்துறை நகர சபை.

பருத்தித்துறை நகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் சபைத் தலைவரின் மேலதிக ஒரு வாக்கால் இன்று நிறைவேறியது.

சபையின் விசேட கூட்டம் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானபோது சபைத் தலைவர் யோசப் இருதயராஜ் வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார்.

அதைப் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரியதை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

வாக்கெடுப்பின்போது ஆளும்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 5 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேச்சைக்குழு ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினருமான 7 பேரும் ஆதரவாகவும், எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த ஒரு உறுப்பினருமாக 7 பேர் எதிராக வாக்களித்தனர்.

மொத்தமாகவுள்ள 15 உறுப்பினர்களில் ஈ.பி.டி.பியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் சமூகமளிக்காததால் வாக்கெடுப்பில் சமநிலை ஏற்பட்டது.

இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கச் சபைத் தலைவருக்கு உள்ள தற்துணிவு அதிகாரத்துக்கு அமைய அவர் மேலதிக ஒரு வாக்கு அளித்தமையால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேறியது.

Leave A Reply

Your email address will not be published.