சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மஹ்முதுல்லா ஓய்வு.

வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக விளங்குபவர் மஹ்முதுல்லா. இவர் வங்கதேச டி20 அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் மஹ்முதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதனை வங்கதேச கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது.

இதுகுறித்து மஹ்முதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறுவது எளிதானது அல்ல. நான் எப்பொழுதும் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன், எனது டெஸ்ட் வாழ்க்கையை முடிக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்.

நான் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்றாலும், இன்னும் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன், மேலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எனது நாட்டிற்காக எனது சிறந்ததை தொடர்ந்து வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெர்வித்துள்ளார்.

வங்கதேச அணிக்காக இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹ்முதுல்லா 2,914 ரன்களையும், 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் 5 சதம், 16 அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.