புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் 2022 நிறைவேற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மிகப் பெரும் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.

பிரதேச சபை தவிசாளர் தவிசாளர் அ.தவக்குமாரினால் அவர்களின் தலைமையில் இன்று(25) பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சபை அமர்வில் புதிய வரவு செலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டது.

வாதப் பிரதிவாதங்களின் பின்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிராக ஒருவர் மட்டுமே வாக்களித்திருந்தார். ஒருவர் வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை.
22 உறுப்பினர்களை கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 20 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.